பிரதமர் பிறப்பித்த உத்தரவு மீது எடுத்த நடவடிக்கை என்ன?: மத்திய அமைச்சகங்கள் அறிக்கை அளிக்க உத்தரவு
மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களும் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
மத்திய அரசின் இ-வணிக தளமாக 'ஜி.இ.எம்.' தளம் செயல்படுகிறது. இந்த தளத்தை மத்திய அமைச்சகங்கள் பயன்படுத்த வேண்டும், அதிகாரிகளுடன் சிற்றுண்டி கூட்டங்களை நடத்தவேண்டும், மத்திய அரசின் முன் முயற்சிகளை விளம்பரப்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுகளை செயல்படுத்தி இருக்கும் விதம், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களும் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story