"அதானி பின்னால் உள்ள சக்தி யார்?" - ராகுல் காந்தி வெளியிட்ட பகீர் வீடியோ


அதானி பின்னால் உள்ள சக்தி யார்? - ராகுல் காந்தி வெளியிட்ட பகீர் வீடியோ
x

அதானி குழுமத்தின் வளர்ச்சி தொடர்பான வீடியோ ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி,

அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ள நிலையில், டுவிட்டரில் அதானி குழுமத்தின் வளர்ச்சி தொடர்பான வீடியோ ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்குமான வளர்ச்சி என பிரதமர் மோடி கூறி வரும் நிலையில் ஒட்டுமொத்த நாடும் ஒரே நபருக்கு பின்னால் நிற்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

2014-ம் ஆண்டு முன்பு வரை, அதானியின் வர்த்தக தொடர்பை மேற்கோள்காட்டியுள்ள ராகுல் காந்தி, 2014 க்குப் பிறகு அனல்மின் நிலையம், காற்றாலை சுரங்கம், துறைமுகங்கள், விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கால் பதித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வ வளங்களும் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டது ஏன்? என பிரதமரிடம் மீண்டும் கேள்வி எழுப்ப விரும்புவதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, இதற்கு பின்னால் உள்ள சக்தி யார் என வினவியுள்ளார். இது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்கள் மற்றும் குடிமக்களின் கேள்வி என்றும், பிரதமரே பதில் தாருங்கள் என்றும், ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.





Next Story