குளத்தில் குதித்து பெண் தற்கொலை


குளத்தில் குதித்து  பெண் தற்கொலை
x

துமகூரு அருகே குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

துமகூரு:

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா நீலகொண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா (வயது 26). இவரது கணவர் நாகேஷ். இந்த தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல் நேற்று முன்தினம் மாலையும் தம்பதி இடையே குடும்பத் தகராறு உண்டானது.

இதனால் கோபித்துக்கொண்டு குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற சுஷ்மிதா, அங்குள்ள குளக்கரையில் குழந்தையை கீழே இறக்கிவிட்டார். பின்னர் சுஷ்மிதா குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஆள்நடமாட்டம் இல்லாமல் தனியாக இருந்த குழந்தை கதறி அழுதபடி இருந்துள்ளது. சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து நாகேசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகே சுஷ்மிதா குளத்தில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.


Next Story