ரூ.6½ லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்


ரூ.6½ லட்சம் மதிப்புள்ள  போதைப்பொருட்கள் பறிமுதல்
x

ரூ.6½ லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு: போதைப்பொருட்கள் பறிமுதல்பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக டி.ஜே.யான ஜபின்ஜட் கியாரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், டார்க்நெட் என்ற இணையதளம் மூலமாக வெளிநாட்டில் இருந்து போதைப்பொருட்களை வரவழைத்து, இங்கு வசிக்கும் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

விவேக்நகர் பகுதியில் வைத்து போதைப்பொருட்களை விற்றபோது அவர் போலீசாரிடம் சிக்கி இருந்தார். விருந்து நிகழ்ச்சிகளுக்கும் அவர் போதைப்பொருட்களை சப்ளை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.6½ லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஜபின்ஜட் கியாரி மீது விவேக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story