'தவறான சிக்னலே ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம்' - ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கம்
தவறான சிக்னலே ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் என ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கமளித்துள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த மாதம் 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே உலுக்கியது.
இந்த விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேளையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், தவறான சிக்னலே ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதால் தான் மெயின் லைனில் செல்லவேண்டிய கோரமண்டல் விரைவுரெயில் லூப் லைனில் சென்று சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக மோதியது என்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.
Related Tags :
Next Story