நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் - சர்பானந்தா சோனோவால்


நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் - சர்பானந்தா சோனோவால்
x
தினத்தந்தி 22 Oct 2022 10:33 PM IST (Updated: 23 Oct 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.

கவுகாத்தி,

பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஸ்கார் மேளா திட்டத்தை இன்று காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியின்போது புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுகிற 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்ட்டன.

இந்த நிலையில், கவுகாத்தில் நடைபெற்ற திட்டத்தின் தொடக்க விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டு 200 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, '' 2047-ம் ஆண்டுக்குள் தற்சார்பு நாடாக புதிய இந்தியாவை வடிவமைப்பதிலும் கட்டமைப்பதிலும் நமது இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்பதை பிரதமர் சரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், அவர்கள் புதிய வலிமையான இந்தியாவின் இயக்கிகளாக மாறுவதற்கு உதவும்.

நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும்.'' இவ்வாறு அவர் பேசினார்.


Next Story