குடகு மாவட்டத்தில் தொடர் கனமழை: பாகமண்டலாவில் நிலச்சரிவு; சாலைகளில் வெள்ளம்


குடகு மாவட்டத்தில் தொடர் கனமழை:  பாகமண்டலாவில் நிலச்சரிவு; சாலைகளில் வெள்ளம்
x

குடகு மாவட்டத்தில் தொடர் கனமழையால் பாகமண்டலாவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குடகு:

குடகு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தொடர் கனமழை காரணமாக பள்ளி, அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது. நேற்றுமுன்தினம் பெய்த கனமழை காரணமாக பாகமண்டலாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் மழைநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நானா பகுதியில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளன.

ஹாரங்கி அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் குஷால் நகர் படாவனே பகுதியில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பாகமண்டலாவில் கொய்னாடு உள்பட பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாவட்ட பொறுப்பு மந்திரி பி.சி. நாகேஸ் சோமவார்பேட்டைக்கு வந்தார். அவர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களையும், வெள்ளம் புகுந்த பகுதிகளையும் பார்வையிட்டார். வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதிக்கான காசோலைகளையும் வழங்கினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு

படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story