கணவரை கொன்று உடலை வீசிய மனைவி உள்பட 5 பேர் கைது


கணவரை கொன்று உடலை வீசிய மனைவி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:14+05:30)

கணவரை கொன்று உடலை வீசி சென்ற மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பால்கர்,

கணவரை கொன்று உடலை வீசி சென்ற மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை

பால்கர் மாவட்டம் வாடா தாலுகா கோண்டலே-பந்தன்பாடா கிராமம் அருகே கடந்த 20-ந்தேதி இரவு 10 மணி அளவில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், கழுத்தை நெரித்து தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது மனைவி உள்பட 5 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கைது

போலீசார் அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கள்ளக்காதலை அவர் கைவிட மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி 4 பேரின் உதவியுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்தும், தலையில் தாக்கியும் கொலை செய்ததும், பின்னர் உடலை வீசி சென்றதும் தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் மனைவி உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story