கார் மோதி மளிகை பொருள் டெலிவரி பாய் பலி


கார் மோதி மளிகை பொருள் டெலிவரி பாய் பலி
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:03+05:30)

பெண் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் மளிகை பொருள் டெலிவரி பாய் ஒருவர் பலியானார்.

தானே,

தானே கோட்பந்தர் சாலை பாட்லிபாடா பகுதியை சேர்ந்த வாலிபர் அஜய் தோகானே (வயது19). இவர் ஹிராநந்தானி எஸ்டேட் பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கடையில் இருந்த மளிகை பொருட்களை எடுத்து கொண்டு ஹிராநந்தானி எஸ்டேட்டில் உள்ள வீட்டிற்கு டெலிவரிக்காக சென்றார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அஜய் தோகானே படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். ஆனால் விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாலிபர் அஜய் தோகானே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த காசர்வட்வலி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி சென்றவர் 40 வயது பெண் என தெரியவந்து. அவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகி்னறனர்.


Next Story