'என்னை முதல்-மந்திரியாக நியமியுங்கள்'- கவர்னருக்கு ஒருவர் ருசிகர கடிதம்


என்னை முதல்-மந்திரியாக நியமியுங்கள்- கவர்னருக்கு ஒருவர் ருசிகர கடிதம்
x

மராட்டியத்தில் தன்னை முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும் என கவர்னருக்கு ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் தன்னை முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும் என கவர்னருக்கு ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.

ருசிகர கடிதம்

மராட்டியத்தில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் முகாமிட்டுள்ளதால் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தன்னை முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும் என பீட் மாவட்டம் தகிபால் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் கடாலே என்பவர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு ருசிகர கடிதம் எழுதி உள்ளார்.

பிரச்சினைகளை தீர்ப்பேன்

அவர் அந்த கடிதத்தில், "நான் அரசியல், சமூக வாழ்க்கையில் 10, 12 ஆண்டுகள் இருந்து உள்ளேன். விவசாயிகள், ஏழைகளுக்காக பணியாற்றி உள்ளேன். பேரிடர்களால் மாநிலம் இழப்பை சந்தித்து உள்ளது. எனவே அரசு அதற்கு உடனடி நிவாரணம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனவே என்னை பொறுப்பு முதல்-மந்திரியாக நியமித்து ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றால் வேலைவாய்ப்பு, விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்ப்பேன்" என கூறியுள்ளார்.


Next Story