அவுரங்காபாத் ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்


அவுரங்காபாத் ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 15 Feb 2023 6:45 PM GMT (Updated: 15 Feb 2023 6:46 PM GMT)

அவுரங்கபாத் ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

அவுரங்கபாத் ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போனில் மிரட்டல்

மராட்டிய போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை 5.45 மணி அளவில் போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய ஆசாமி, "நான் பணம் செலுத்தி விட்டேன். ஆனால் எனது வேலை நடக்கவில்லை. இதனால் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளை கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்து உள்ளேன்" எனக்கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.

இது பற்றி உடனடியாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் அவுரங்காபாத் ஐகோர்ட்டு கட்டிடத்துக்கு விரைந்தனர்.

தீவிர சோதனை

ஐகோர்ட்டின் 2 மாடிகள், வாகனம் நிறுத்துமிடம் என அனைத்து பகுதிகளிலும் சல்லடை போட்டு தேடினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. பீகாரில் இருந்து இந்த மிரட்டல் போன் அழைப்பு வந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story