சிவசேனா பிளவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பந்தல் அலங்காரம் மண்டல் மீது போலீசார் நடவடிக்கை


சிவசேனா பிளவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பந்தல் அலங்காரம் மண்டல் மீது போலீசார் நடவடிக்கை
x

சிவசேனா பிளவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பந்தல் அலங்காரம் செய்த மண்டல் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

மும்பை,

சிவசேனா பிளவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பந்தல் அலங்காரம் செய்த மண்டல் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

சிவசேனா ஆலமரம்

கல்யாண் பகுதியில் விஜய் தருண் மண்டல் சார்பில் 58 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த மண்டல் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி அலங்காரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த மண்டல் சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு தொடர்பாக அலங்காரம் செய்து இருந்தது. அதில் சிவசேனா என்பது பெரிய ஆலமரம் என கூறப்பட்டு இருந்தது.

மேலும் பந்தல் அலங்காரத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பால் தாக்கரேவால் உருவாக்கப்பட்ட சிவசேனா உத்தவ் தாக்கரே, ஆனந்த் திகே போன்றவர்களின் கடும் உழைப்பால் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இதற்காக பலர் தங்கள் வாழ்க்கையே தியாகம் செய்தனர். பலர் ரத்தம் சிந்தி உள்ளனர். தற்போது சிவசேனா என்ற ஆலமரத்தில் வளர்ந்த பழங்களை மாற்று கட்சியினர் பறிக்கின்றனர். பழங்கள் போனாலும் தொண்டர்கள் என்ற வேரால் ஆலமரம் நிலைத்து நிற்கிறது என்பதை மாற்று கட்சியினருக்கு கூற விரும்புகிறோம், சிவசேனாவுக்கு துரோகம் செய்தவர்கள் புதைக்கப்படுவார்கள் என கூறப்பட்டு இருந்தது.

போலீசார் நடவடிக்கை

சர்ச்சைக்குரிய இந்த மண்டல் அலங்காரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மண்டல் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். போலீசாாின் நடவடிக்கைக்கு மண்டல் தலைவர் விஜய் சால்வே கண்டனம் தெரிவித்தார். போலீசார் தேவையின்றி மண்டல் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் மண்டல் அலங்காரம் செய்யப்படும். இந்த ஆண்டு சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு தான் எங்கள் தீம். இதுதொடர்பான அலங்காரத்தை முன்கூட்டியே போலீசாரிடம் காட்டி இருந்தோம். அவர்கள் சொன்னது போல சில திருத்தங்களையும் செய்து இருந்தோம்.

இந்தநிலையில் போலீசார் மண்டல் மீது நடவடிக்கை எடுத்து உள்ளனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை புறக்கணித்து உள்ளோம்" என்றார்.


Next Story