அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு எதிராக வரைவு குற்றப்பத்திரிகை தாக்கல்


அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு எதிராக வரைவு குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 11 July 2023 7:00 PM GMT (Updated: 11 July 2023 7:00 PM GMT)

அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு எதிராக சிறப்பு அரசு வக்கீல் சுனில் கோன்சால்வ்ஸ் வரைவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான நவாப் மாலிக், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தொடர்புடையவர்களுடன் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது நீதிமன்ற காவலில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு எதிராக சிறப்பு அரசு வக்கீல் சுனில் கோன்சால்வ்ஸ் வரைவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். வரைவு குற்றச்சாட்டு என்பது ஒரு குற்றவியல் வழக்கில் விசாரணையை தொடங்குவதற்கான முதல் படியாகும். சம்பந்தப்பட்ட கோர்ட்டு இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, அவர் மீது எந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கை தொடரலாம் என்பதை முடிவு செய்யும். விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளை கோர்ட்டு பின்னர் தெரிவிக்கும். முன்னாள் மந்திரி நவாப் மாலிக் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story