இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 26-ந் தேதிக்கு மாற்றம்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு


இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 26-ந் தேதிக்கு மாற்றம்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:42+05:30)

2 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 26-ந் தேதிக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மும்பை,

2 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 26-ந் தேதிக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத் தேர்தல்

புனே மாவட்டத்தில் உள்ள சிஞ்ச்வாட் மற்றும் கஸ்பா பேத் சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் இறந்துவிட்டதை அடுத்து காலியாக உள்ள அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அந்த தேர்தல் தேதி ஒரு நாளைக்கு முன்னதாக 26-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பரீட்சை

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட அதே நாளில் 12-ம் வகுப்பு தேர்வு மற்றும் பட்டப்படிப்புக்கு பரீட்சை நடைபெறுகிறது. இது வாக்குப்பதிவுக்கு பல்வேறு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்பதால், வாக்குப்பதிவு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி பிப்ரவரி 26-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

அதேநேரம் மார்ச் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


Next Story