இடஒதுக்கீடு கேட்டு இஸ்லாமியர்கள் முதல்-மந்திரியிடம் கோரிக்கை


இடஒதுக்கீடு கேட்டு இஸ்லாமியர்கள் முதல்-மந்திரியிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Sept 2023 1:00 AM IST (Updated: 6 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா சமூகத்தினரை தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்பினரும் இடஒதுக்கீடு கேட்டு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மும்பை,

மராத்தா சமூகத்தினரை தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்பினரும் இடஒதுக்கீடு கேட்டு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மராத்தா சமூகத்தினர் போராட்டம்

மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மராத்தா அமைப்பினர் போராட்டத்துக்கு, இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன. மராத்தாக்களுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்து உள்ளார்.

இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை

இந்தநிலையில் தங்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மொசின் அகமது தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேக்கு கோரிக்கை மனு அளித்து உள்ளனர். சமூகம், பொருளாதாரத்தில் இஸ்லாமியர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு தங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Next Story