ரூ.2,000 திரும்ப பெறப்பட்டது நக்சலைட்டுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது- போலீசார் தகவல்


ரூ.2,000 திரும்ப பெறப்பட்டது நக்சலைட்டுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது- போலீசார் தகவல்
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:46 PM GMT)

2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்பபெறப்பட்டது நக்சலைட்டுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக மராட்டிய போலீசார் கூறியுள்ளனர்.

மும்பை,

2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்பபெறப்பட்டது நக்சலைட்டுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக மராட்டிய போலீசார் கூறியுள்ளனர்.

நக்சலைட்டுகளுக்கு பின்னடைவு

ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளுமாறு தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டது மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக கட்சிரோலி துணை ஐ.ஜி. சந்தீப் பாட்டீல் கூறுகையில், "நக்சலைட்டுகள் பொதுப்பணித்துறை, தும்பிலி இலை ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறித்து உள்ளனர். அவர்கள் அந்த பணத்தை வனப்பகுதியில் பதுக்கி வைத்து உள்ளனர். பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் அதிகளவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக உள்ளது. எனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்பட்டது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்து உள்ளது.

தடுக்க தீவிர நடவடிக்கை

ரூபாய் நோட்டுகளை மாற்ற நக்சலைட்டுகள் தீவிரம் காட்டி வருவதாக எங்களுக்கு உளவுத்துறை தகவல் கிடைத்து உள்ளது. சமீபத்தில் நக்சலைட்டுகள் மாற்ற இருந்த ரூ.6 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. நக்சலைட்டுகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். வங்கி அதிகாரிகளிடம் தொடர்பில் இருந்து தும்பிலி இலை ஒப்பந்தாரர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.




Next Story