நடிகர் மகேஷ் தாக்குரிடம் ரூ.5.4 கோடி மோசடி


நடிகர் மகேஷ் தாக்குரிடம் ரூ.5.4 கோடி மோசடி
x
தினத்தந்தி 22 Sep 2022 7:00 PM GMT (Updated: 2022-09-23T00:30:10+05:30)

மும்பை அந்தேரி பகுதியில் நடிகர் மகேஷ் தாக்குரிடம் ரூ.5.4 கோடி மோசடி

மும்பை,

மும்பை அந்தேரி பகுதியில் நடிகர் மகேஷ் தாக்குர் (வயது மும்பை அந்தேரி பகுதியில்54) வசித்து வருகிறார். இவர் பல இந்தி படங்கள் மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து உள்ளார். மோடி சீசன்-2 என்ற வெப் சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். சொத்து பிரச்சினையில் கோர்ட்டு விவகாரங்களை கவனித்து கொள்ள சண்டிகாரை சேர்ந்த மயங்க் கோயல் என்பவரை தனது வக்கீலாக நியமித்து இருந்தார். அந்த வக்கீல் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும், கோர்ட்டு கட்டணம், சட்ட ஆலோசனை கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி நடிகரிடம் இருந்து ரூ.5 கோடியே 43 லட்சம் வாங்கி உள்ளார்.

இந்தநிலையில் வக்கீலின் நடவடிக்கையில் நடிகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர் வக்கீலிடம் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம், கோர்ட்டு கட்டண ரசீது போன்றவற்றை கேட்டார். அதன்பிறகு வக்கீல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடிகர் வெர்சோவா போலீசில் மோசடி குறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் மகேஷ் தாக்குரிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட வக்கீலை தேடி வருகின்றனர்.


Next Story