சஞ்சய் ராவத் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்- ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. கூறுகிறார்


சஞ்சய் ராவத் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்- ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. கூறுகிறார்
x

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

தானே,

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறியுள்ளார்.

சர்ச்சை பேச்சு

மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத், "யாரை நம்ப வேண்டும் என்ற பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டோம்.

அவர்கள் (அதிருப்தியாளர்கள்) ஆன்மா அழிந்து போன உடல்கள். அவர்களின் மனம் செத்துவிட்டது. 40 உடல்கள் அசாமில் இருந்து வந்து நேரடியாக பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பப்படும்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மறைந்த சிவசேனா தலைவர் ஆனந்த் திகேயின் "சக்தி ஸ்தல்" நினைவிடத்தில் நிருபர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறியதாவது:-

கலாசாரம் இல்லை...

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஒரு தந்தை. அவரது குடும்பத்தினர் அவரது கருத்துகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

எனவே அவர் பேசும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இது மராட்டியத்தின் கலாசாரம் இல்லை. அவர் கருத்து தெரிவிக்கும் விதத்தை அரசு கவனித்துக்கொண்டு இருக்கிறது. அதிகாரம் கையை விட்டு நழுவுவதை ஒருவர் உணரும்போது இப்படி நடக்கிறது. விரும்பத்தகாத கருத்துகளுக்கு மராட்டிய மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சஞ்சய் ராவத்தை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "இதை உங்களின் மூலமாக தெரிந்துகொண்டேன். அவருக்கு வாழ்த்துக்கள்" என்றார்.


Next Story