அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதா?- உள்துறை மந்திரி மறுப்பு


அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதா?- உள்துறை மந்திரி மறுப்பு
x

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்படவில்லை என உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்படவில்லை என உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறியுள்ளார்.

ஷிண்டே குற்றச்சாட்டு

மந்திாி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமைக்கு எதிராக அசாமில் முகாமிட்டு உள்ளனர். இந்தநிலையில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சிவசேனாவினர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலுக்கு கடிதம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் உள்பட 38 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வீடு மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெற பட்டுள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மகாவிகாஸ் அகாடி அரசு மற்றும் உத்தவ் தாக்கரே, சரத்பவார், ஆதித்ய தாக்கரே போன்ற தலைவர்கள் தான் பொறுப்பு எனவும் கூறியிருந்தார்.

மந்திரி மறுப்பு

இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் குற்றச்சாட்டை உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " மாநிலத்தில் எந்த எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு திரும்ப பெறப்படவில்லை. டுவிட்டரில் கூறப்பட்ட குற்றச்சாட்டு தவறானது. அதில் உண்மையில்லை" என்றார்.


Next Story