விளையாடி கொண்டிருந்த சிறுவன் கார் மோதி பலி


விளையாடி கொண்டிருந்த சிறுவன் கார் மோதி பலி
x

கட்டிட வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் கார் மோதி பலியானான்.

மாவட்ட செய்திகள்

அம்பர்நாத்,

டோம்பிவிலியை சேர்ந்த சிறுவன் பிரசாந்த் (வயது 14). இவன் நேற்று மாலை 5 மணி அளவில் கட்டிட வளாகத்தில் மற்ற சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது வளாகத்தில் வேகமாக வந்த கார் ஒன்று சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் ஜேயேஷ் நர்லேக்கர் (35) என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும் பலியான சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-----


Next Story