8 பேரை கத்தியால் தாக்கிய வெளிநாட்டுக்காரர் மனநலம் பாதிக்கப்பட்டவர்- போலீசார் தகவல்


8 பேரை கத்தியால் தாக்கிய வெளிநாட்டுக்காரர் மனநலம் பாதிக்கப்பட்டவர்- போலீசார் தகவல்
x

8 பேரை கத்தியால் தாக்கிய வெளிநாட்டுக்காரர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

8 பேரை கத்தியால் தாக்கிய வெளிநாட்டுக்காரர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்தனர்.

சரமாரி தாக்குதல்

தென்மும்பை டாடா கார்டன் மற்றும் பார்சி வெல் வழியாக நடந்து சென்றவர்கள் மீது கடந்த புதன்கிழமை கென்யாவை சேர்ந்த ஜான் (வயது50) என்பவர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கினார். இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆசாத் மைதான் போலீசார் ஜானை கைது செய்தனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பயங்கரவாத சதிதிட்டம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். எனினும் இந்த தாக்குதலுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

மேலும் 8 பேரை கத்தியால் தாக்கிய ஜான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " தாக்குதல் நடந்த அன்று மாலையே போலீசார் ஜானை கைது செய்தனர். காயமடைந்த 8 பேரும் தென்மும்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை நடந்த விசாரணையில் குற்றவாளிக்கு மனநலப்பிரச்சினை இருப்பது தெரியவந்து உள்ளது. அவர் மாறி, மாறி பேசுகிறார். கடவுள் பற்றியும் பேசுகிறார் " என்றார்.


Next Story