தடோபா புலிகள் காப்பகத்தில் ஜீப், வேன் சவாரிக்காக பெண்களுக்கு பயிற்சி


தடோபா புலிகள் காப்பகத்தில் ஜீப், வேன் சவாரிக்காக பெண்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சந்திராப்பூரில் பிரபலமான தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் ஜீப், வேன் சவாரி வாகனங்களை ஓட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது

மும்பை,

சந்திராப்பூரில் பிரபலமான தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு ஜீப், வேன் சவாாி உள்ளது. சுற்றுலா பயணிகள் ஜீப், வேனில் சென்று வனப்பகுதியில் உள்ள புலிகளை பார்க்க முடியும். இந்தநிலையில் புலிகள் காப்பகத்தில் சவாரி வாகனங்களை ஓட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் அவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "பழங்குடியினத்தை சேர்ந்த 30 பெண்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பயிற்சி கொடுக்க தொடங்கி உள்ளோம். முதல் கட்டமாக இந்த திட்டத்தை சந்திராப்பூர் குட்வந்தா கிராமத்தில் தொடங்கி இருக்கிறோம். பயிற்சியில் குட்வந்தா, கோசரி, சிதாராம்பேத் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அருகில் உள்ள கிராமங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்படும். பயிற்சி மூலம் தடோபா புலி காப்பகத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.


1 More update

Next Story