மும்பை நோக்கி சமையல் எண்ணெய் எற்றி வந்த லாரி விபத்து- 12 ஆயிரம் லிட்டர் வடிந்து நாசம்


மும்பை நோக்கி சமையல் எண்ணெய் எற்றி வந்த லாரி விபத்து- 12 ஆயிரம் லிட்டர் வடிந்து நாசம்
x

மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில், 12 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது. கிராம மக்கள் தங்கள் கேன்கள், பாத்திரங்களில் எடுத்து சென்றனர்.

மாவட்ட செய்திகள்

வசாய்,

மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில், 12 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது. கிராம மக்கள் தங்கள் கேன்கள், பாத்திரங்களில் எடுத்து சென்றனர்.

லாரி கவிழ்ந்து விபத்து

குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து மும்பை நோக்கி, சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. தகானு அருகே தவா என்ற பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் விஸ்வாஸ் (வயது 30) படுகாயமடைந்தார். டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்ததால், அதில் இருந்த 12 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் ஆறாக சாலையில் வடிந்து ஓடியது.

முண்டியத்து எடுத்து சென்ற கிராம மக்கள்

இதுபற்றி அறிந்த உள்ளூர் கிராம மக்கள் முண்டியடித்துக்கொண்டு, தங்கள் பாத்திரத்தை எடுத்துகொண்டு அங்கு சென்றனர். பொதுமக்கள் தங்கள் கேன்கள் மற்றும் வாளியில் சிதறி கிடந்த எண்ணெய்யை பிடித்து கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தினால் சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த காசா போலீசார் அங்கு சென்று கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

1 மணி நேரம் பாதிப்பு

சுமார் 1 மணி நேரம் நடத்திய நடவடிக்கைக்கு பின்னர், அந்த இடத்தில் பாதிப்பான போக்குவரத்து வாகனம் அப்புரப்படுத்தப்பட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த டிரைவரை போலீசார் மீட்டு, காசாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தகானு மெத்வான் பகுதியில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனை ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 8 மணி நேரம் கியாஸ் டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-----


Next Story