விபத்துகள் அதிகரிக்க காரணம் என்ன?- மந்திரி வெளியிட்ட தகவல்


விபத்துகள் அதிகரிக்க காரணம் என்ன?- மந்திரி வெளியிட்ட தகவல்
x

மராட்டியத்தில் புதிய நேரான சாலைகள், அதிக வேகமும் தான் விபத்துகள் அதிகரிக்க காரணம் என மந்திரி அனில் பரப் கூறினார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் புதிய நேரான சாலைகள், அதிக வேகமும் தான் விபத்துகள் அதிகரிக்க காரணம் என மந்திரி அனில் பரப் கூறினார்.

விபத்துகள் அதிகரிப்பு

மராட்டியத்தில் 2021-ல் 29 ஆயிரத்து 493 விபத்துகளும், 2020-ல் 24 ஆயிரத்து 971 விபத்துக்களும் நடந்து உள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதத்தில் மட்டும் 11 ஆயிரத்து 900 விபத்துகள் நடந்து உள்ளன.

இந்தநிலையில் முகமில்லா ஆர்.டி.ஓ. சேவை தொடக்க விழாவில் மந்திரி அனில் பரப் பேசியதாவது:-

துரதிருஷ்டவசமாக மராட்டியத்தில் அதிக விபத்துக்கள் நடந்து உள்ளன. விபத்துகளுக்கு சில காரணங்களை கண்டுபிடித்து உள்ளோம். முதல் காரணம் மராட்டியத்தில் வெகுசில சாலைகள் மட்டுமே நேராக உள்ளன. மற்றொரு காரணம் புதிதாக போடப்பட்டுள்ள நேரான சாலைகள் மற்றும் பெரிய நெடுஞ்சாலைகளிலும் வாகன ஓட்டிகள் அதிக வேகமாக சென்று விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

3 மாதத்தில் பலன் கிடைக்கும்

விபத்துக்களை குறைக்க, விபத்து பகுதிகளை கண்டறிய ஒவ்வொரு தாலுகாவிற்கு இலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு விபத்துக்களை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் பலன் 3 மாதங்களுக்கு பிறகு தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story