மாநகராட்சி வைப்பு நிதி மீது மத்திய அரசு கண்வைப்பது ஏன்?- சுப்ரியா சுலே எம்.பி. கேள்வி


மாநகராட்சி வைப்பு நிதி மீது மத்திய அரசு கண்வைப்பது ஏன்?- சுப்ரியா சுலே எம்.பி. கேள்வி
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:17:11+05:30)

மும்பை மாநகராட்சி நிலையான வைப்புநிதி மீது மத்திய அரசு கண்வைப்பது ஏன் என சுப்ரியா சுலே எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

மும்பை,

மும்பை மாநகராட்சி நிலையான வைப்புநிதி மீது மத்திய அரசு கண்வைப்பது ஏன் என சுப்ரியா சுலே எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மும்பை பயணத்தின்போது ரூ.38 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது மும்பை மாநகராட்சியை தொடர்ந்து தக்கவைத்து வரும் சிவசேனாவை கடுமையாக சாடினார். மேலும், "மும்பை மாநகராட்சி பணத்தை நிலையான வைப்பு நிதியாக வைத்திருப்பது பொதுமக்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் எந்த விதத்திலும் உதவாது. இந்த பணம் வளர்ச்சி பணிக்காக பயன்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

கண் வைப்பது ஏன்?

பிரதமரின் இந்த பேச்சு குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறுகையில், "மும்பை மாநகராட்சியின் வைப்புநிதிகள் ஏன் பணமாக்கப்பட வேண்டும்? மத்திய அரசு தன்னிடம் போதுமான நிதி இருப்பதாக கூறினால், அது ஏன் மும்பை மாநகராட்சியின் வைப்பு நிதி மீது கண் வைக்கிறது?" என்றார்.

மேலும் அவர், "சமூக செயல்பட்டாளர் நரேந்திர தபோல்கர் தனது வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கைக்கு எதிராக போராடினார். அதற்காக அவர் கொல்லப்பட்டார். தற்போது மாநிலத்திலும் நாட்டிலும் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அதிகாரத்தில் இருப்பவர்கள் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்பிக்கை இருக்கலாம். ஆனால் மூட நம்பிக்கை இருக்க கூடாது. மூடநம்பிக்கைக்கு எதிரான நமது போராட்டம் தொய்வின்றி தொடரும். இது தபோல்கருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்" என்றார்.


Next Story