சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : நவீன தோட்டக்காரன் + "||" + Vanavil : Modern gardener

வானவில் : நவீன தோட்டக்காரன்

வானவில் : நவீன தோட்டக்காரன்
இப்போது எல்லாமே நவீனம்தான். இதற்குக் காரணமே ஆள் பற்றாக்குறை. நகர்பகுதிகளில் தோட்டம் அமைப்பது கொஞ்சம் சிரமம்.
ஆனால் இப்போது வீட்டின் மேற்கூரை, மாடித் தோட்டம் என பலவும் பிரபலமாகி வருகிறது. வீட்டு தோட்டம் அமைப்பது மனதுக்கு நிம்மதி தருவதோடு மன அழுத்தம் குறைவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

தோட்டம் அமைக்கலாம், தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இந்த சமயத்தில் தோட்டத்துக்கு தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டுமல்லவா. இதற்கு உதவ வந்துள்ளதுதான் வாட்டர் கண்ட்ரோலர். பி.வி.சி. குழாய்களை தயாரிக்கும் பினோலெக்ஸ் நிறுவனமே தண்ணீரை குறிப்பிட்ட நேரம் வரை பாய்ச்சும் கட்டுப்பாட்டு கருவியை தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது.

 பினோலெக்ஸ் டிஜிட்டல் ஹோம் கார்டன் வாட்டர் டைமர் என்ற பெயரில் இது விற்பனைக்கு வந்துள்ளது. தோட்டம் அல்லது தொட்டிக்கு தண்ணீர் பாய வேண்டிய நேரத்தை இதில் செட் செய்தால் போதும். நீங்கள் மறந்து போனாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தண்ணீர் பாய அனுமதிக்காது. இதில் ஒரு நிமிஷம் முதல் 360 நிமிஷம் வரை செட் செய்ய முடியும். இதை செட் செய்வது எளிது. அதேபோல இதை எந்த இடத்திலும் நிறுவ முடியும். அவ்வளவு எளிதானது. பினோலெக்ஸ் விற்பனையகம் அல்லது அமேசான் இணையதளத்தில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. விலை ரூ. 3,299 ஆகும். 


தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : எல்.ஜி.யின் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்
இது ஸ்மார்ட்டான உலகம். உங்களது வீட்டு உபயோக பொருட்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
2. வானவில் : நடமாடும் ‘எந்திரன்’ டெமி
இப்போது வீடுகளில் பர்சனல் கம்ப்யூட்டர் பெரும்பாலும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.
3. வானவில் : ஆபத்து கால விசில்
அவசர காலத்தில் நாம் இருக்குமிடத்தை அடையாளம் காட்டி மீட்பர்களை அழைக்க உதவுகிறது விசில்.
4. வானவில் : கோடக் ஸ்மார்ட் போன்
புகைப்படம் சார்ந்த கேமராக்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோடக் நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த புல்லிட் நிறுவனத்துடன் இணைந்து கோடக் ஐ.எம். 5 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : நில நடுக்கத்தை கண்டுபிடித்து ‘அலெர்ட்’ செய்யும் அற்புத ‘ஆப்’
இயற்கை பேரழிவுகளை தவிர்க்க முடியாது. நிலநடுக்கம் என்ற சொல்லைக் கேட்டாலே நமக்கு நடுக்கம் ஏற்படும்.