சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : வெயிலில் சருமம் கருப்பாவது ஏன்? + "||" + Day One Info: Why Do You Have Skin in Sun?

தினம் ஒரு தகவல் : வெயிலில் சருமம் கருப்பாவது ஏன்?

தினம் ஒரு தகவல் : வெயிலில் சருமம் கருப்பாவது ஏன்?
தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால், வழக்கமாக பெய்யும் பருவ மழையும் சரியாக பெய்யவில்லை. இதனால், கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் ஒரு புறம் இருந்தால், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் சரும நோய்கள் மற்றொரு புறம் பாடுபடுத்த தொடங்கி விடுகிறது. வெயிலில் வெளியே சென்றால், உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதனால் வியர்வையில் இருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசும். உடலில் வேர்க்குரு, கட்டிகள், அரிப்பு, அழுக்கு, தேமல் போன்றவை ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் சின்னம்மை வருவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் சூரிய கதிர்கள் நேரடியாக உடல் மீது தாக்கினால், தோல்கள் கருப்பாக மாறிவிடும். வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் குறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் வகையை அதிகமாக குடிக்க வேண்டும். உணவில் அதிகமாக காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீன் சாப்பிடலாம். முடிந்தவரை மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. இதனால், வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்க முடியும்.

கோடைகாலத்தில் பெரியவர்களைவிட, குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போது துணியால் மூடி அழைத்து செல்ல வேண்டும். இதனால், சூரிய வெப்பத்தின் நேரடி தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும். அதே போல வீட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஆடைகளை போடக்கூடாது. சருமத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்கு சருமம் கருப்பாகி விடுவதை கவனித்திருப்பீர்கள். இதற்கு காரணம், சூரிய கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாக சருமத்தை தாக்கும்போது, அதிலுள்ள ‘பி’ வகை புறஊதா கதிர்கள் சருமத்தின் செல்களிலுள்ள டி.என்.ஏ.க்களை அழிக்கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காக சருமத்துக்கு கருப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கருத்துவிடுகிறது.

சருமம் தன்னைத்தானே சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக எடுத்துக்கொள்கிற தற்காப்பு நடவடிக்கை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். சருமம் கருப்பாவதை தடுக்கக் கடுமையான வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலையக் கூடாது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால், பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்கு நாம் தருகின்ற பாதுகாப்பு. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக திருத்தணியில் 1 11.2 டிகிரி வெயில் பதிவு
தமிழகத்தில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இன்று (ஞாயிறு) 11 மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது : அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர காலத்தை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
3. கத்திரி வெயிலின் இறுதி நாளிலும் பெரம்பலூர்-அரியலூரில் வெயில் கொளுத்தியது
கத்திரி வெயிலின் இறுதி நாளிலும் பெரம்பலூர்-அரியலூரில் கடுமையான வெயில் கொளுத்தியது.
4. தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாக கொளுத்தும் வெயில்
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகாவது குறையுமா? என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
5. சுட்டெரிக்கும் வெயில், தினமும் 2 மணி நேரம் ஆனந்த குளியல் போடும் ஆண்டாள் கோவில் யானை
கொளுத்தும் வெயிலை தொடர்ந்து தினமும் 2 மணி நேரம் ஆண்டாள் கோவில் யானை குளித்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.