சென்செக்ஸ் 228 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 74 புள்ளிகள் உயர்ந்தது


சென்செக்ஸ் 228 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 74 புள்ளிகள் உயர்ந்தது
x
தினத்தந்தி 15 May 2019 4:21 AM GMT (Updated: 15 May 2019 4:21 AM GMT)

9 தினங்கள் தொடர் சரிவுக்குப்பின் சென்செக்ஸ் 228 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 74 புள்ளிகள் உயர்ந்தது

மும்பை

9 தினங்கள் தொடர் சரிவுக்குப் பின் செவ்வாய்க் கிழமை அன்று பங்கு வர்த்தகம் காளையின் ஆதிக்கத்திற்குள் வந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 228 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 74 புள்ளிகள் உயர்ந்தது.

பங்குகளில் முதலீடு

உலக நிலவரங்களால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் கடும் ஏற்ற இறக்கங்களை கண்டு வந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து 9 தினங்கள் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. தொடர் சரிவால் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து இருந்தது. எனவே அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பலரும் பங்குகளில் அதிக முதலீடு செய்தனர். சந்தைகள் ஏற்றம் பெற அது முக்கியக் காரணமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் குறைந்து இருப்பதும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது.

அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் முன்னேறின. அதில் தொலைத் தொடர்புத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.81 சதவீதம் உயர்ந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் சன் பார்மா, பார்தி ஏர்டெல், வேதாந்தா, இண்டஸ் இந்த் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா மோட்டார்ஸ், எல் அண்டு டி, என்.டி.பி.சி., ஐடிசி உள்ளிட்ட 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம்

டி.சி.எஸ்., எச்.சி.எல். டெக் னாலஜிஸ், பஜாஜ் பைனா ன்ஸ், பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், ஏஷியன் பெயிண்ட், கோட்டக் மகிந்திரா வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 227.71 புள்ளிகள் உயர்ந்து 37,318.53 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37,572.70 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 36,956.10 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1220 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1287 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 134 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,371 கோடியாக குறைந் தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.2,372 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 73.85 புள்ளிகள் முன்னேறி 11,222.05 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,294.75 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,108.30 புள்ளிகளுக்கும் சென்றது.


Next Story