பிளாஸ்டிக்கில் சுத்தமான காற்று


பிளாஸ்டிக்கில் சுத்தமான காற்று
x
தினத்தந்தி 12 Oct 2019 1:49 PM GMT (Updated: 12 Oct 2019 1:49 PM GMT)

சீனாவின் குவாண்டோங் மாகாணத்தின் மலைப்பிரதேசத்தில் ‘சுத்தமான காற்றை’ பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

மலைப்பகுதிக்கு மலையேற்றம் செய்வதற்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, காற்றை விற்பனை செய்து வருகிறார்கள். 

எதிர்பாராத விதமாக இந்தத் தொழில் சூடு பிடித்துவிட்டதுதான் ஆச்சரியம். இரண்டு விதமான பிளாஸ்டிக் பைகளில் காற்று விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பை 98 ரூபாய்க்கும், பெரிய பை 288 ரூபாய்க்கும் கிடைக்கிறது. 

மலை உச்சியில் இருந்து இந்த சுத்தமான காற்றைப் பிடித்து வருவதாக சொல்கிறார்கள். பையைப் பிரித்து காற்றை உடனே சுவாசிக்கலாம், வீட்டுக்கு எடுத்துச் சென்றும் பயன்படுத்தலாம். காற்று விற்பனை சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. சீனாவில் காற்று மாசு அதிகம் என்பதால், சுத்தமான காற்றை மக்கள் நாடுகிறார்கள்.

# நம்பளும், இந்த வியாபாரத்தை தொடங்கிட வேண்டியதுதான்.

Next Story