இந்தியாவின் உயரிய விருதுகள்


இந்தியாவின் உயரிய விருதுகள்
x
தினத்தந்தி 14 Oct 2019 7:49 AM GMT (Updated: 14 Oct 2019 7:49 AM GMT)

இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த சிவிலியன் விருது பாரத ரத்னா

* இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த சிவிலியன் விருது பாரத ரத்னா.

* 1954-ல் முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்ற மூவர் - ராஜாஜி, சர்.சி.வி.ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்.

* இறப்புக்குப் பின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் மனிதர் லால் பகதூர் சாஸ்திரி. (1966).

* இறப்புக்குப் பின் சுபாஷ் சந்திரபோஸூக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவருடைய குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

* பாரத ரத்னா விருது பெற்ற மூன்று தமிழக முதல்வர்கள் ராஜாஜி (1954), காமராஜர் (1976), மற்றும் (எம்.ஜி.ஆர். 1988)

* எம்.எஸ்.சுப்புலட்சுமி, சி.சுப்பிரமணியம், அப்துல்கலாம் ஆகியோர் 1998-ல் பாரத ரத்னா விருது பெற்றனர்.

* பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ இதுவே இந்திய சிவிலியன் விருதுகளின் சரியான வரிசை முறை.

* பாரத ரத்னா விருது பெற்ற இரு வெளிநாட்டவர்கள், கான் அப்துல் கபார்கான் (பாகிஸ்தான் 1987), நெல்சன் மண்டேலா (தென் ஆப்பிரிக்கா 1990).

* பாரத ரத்னா (1992), பத்ம விபூஷண் (1976), பத்ம பூஷண் (1965), பத்ம ஸ்ரீ (1958) ஆகிய நான்கு விருதுகளையும் பெற்ற முதல் இந்தியர் (சத்யஜித்ரே).

* 2019-ல் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் புபென் ஹஸாரிகா, பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக்.

* இளம் வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் விஸ்வநாதன் ஆனந்த்.

* பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் திரைப்பட நடிகை நர்கீஸ் தத்.


Next Story