சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : குடலில் இருக்கும் நுண்ணுயிரிகள் + "||" + Day One Information: Microbes in the gut

தினம் ஒரு தகவல் : குடலில் இருக்கும் நுண்ணுயிரிகள்

தினம் ஒரு தகவல் : குடலில் இருக்கும் நுண்ணுயிரிகள்
நம்முடைய குடலில் கிட்டத்தட்ட 1½ கிலோ அளவுக்கு பாக்டீரியா இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம்.நம்முடைய குடலில் கோடிக்கணக்கில் பாக்டீரியா இருக்கும். அவற்றின் மரபணுக்கள், நம் மரபணுக்களைவிட நூறு மடங்கு அதிகம்.
 நம் குடலில் உள்ள பாக்டீரியா நாம் உண்ணும் உணவைச் செரிக்கச்செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை. அது மட்டுமல்ல. ‘வைட்டமின் கே’ போன்ற சில சத்துகளை உற்பத்தி செய்வdது, ஹார்மோன்களை முறைப்படுத்துவது, கழிவுகளை வெளியேற்றுவது போன்ற செயல்களுக்கும் துணைபுரிபவை. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இணைப்பில் இருந்து தொற்றுகளுக்கு எதிராகப் போராடுவதிலும் இவற்றின் பங்கு முக்கியமானது. எடையைக் கட்டுப்படுத்துவதில் குடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குடலை நம் உடலின் இரண்டாவது மூளை என்று சொல்லலாம். நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் மையமானது குடல் என்றும், உடலில் நடக்கிற எல்லாச் செயல்களுக்கும் குடலுடன் தொடர்புண்டு என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

நாம் உண்ணும் உணவானது முறையாகச் செரிக்கப்பட்டு, உணவிலுள்ள சத்துகள் ரத்தத்துடன் முழுமையாகக் கலந்து நமக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கும்பட்சத்தில் நம் குடல் ஆரோக்கியம் சீராக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நம் குடலில் உள்ள நுண்ணுயிரிகள் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியா அளவுகளைப் பொறுத்தே அந்த ஆரோக்கியம் தீர்மானிக்கப்படும். ஈஸ்ட், கெட்ட பாக்டீரியா, பாராசைட்ஸ், பைபோடாபாக்டீரியா போன்றவற்றின் தாக்கத்தாலும் லாக்டோபேசிலஸ் போன்ற நல்ல நுண்ணுயிரிகள் குறைவாக உள்ள உணவுகளை உண்பதாலும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படும்போது அதன் பிரதிபலிப்பு வளர்சிதை மாற்றத்தில் தெரியும். அதன் விளைவாகத் தீவிர வீக்கம் ஏற்படும். குடலில் கெட்ட பாக்டீரியா அதிகரிக்கும் போது சருமம், மூட்டுகள் மற்றும் மூளைப் பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். இது கெட்ட பாக்டீரியாவை வெளித்தள்ள உடலின் எதிர்ப்புத் திறனை அதிகமாகத் தூண்டும்.

குடலில் உள்ள கெட்ட நுண்ணுயிரிகள், உடலில் உள்ள மூட்டுகள், சருமம் மற்றும் மூளை போன்ற பல்வேறு பகுதிகளில் வீக்கம், புண் போன்றவற்றுக்குக் காரணமாகின்றன. இது, உங்கள் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கத்தைத் தொடர்ந்து தூண்டுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உயரும்போது, அது இன்சுலின் தடை அல்லது ப்ரீடயாபட்டிஸ் எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலை, அதிக பசி போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இது இறுதியில் எடை அதிகரிப்பில் வந்து நிற்கும் எனவும் எச்சரிக்கிறார்கள் மருத்துவ வல்லுனர்கள்.