சிறப்புக் கட்டுரைகள்

மூன்றாவது காலாண்டில்தாபர் இந்தியா லாபம் 9% வளர்ச்சி + "||" + In the third quarter Tabar India profits up 9%

மூன்றாவது காலாண்டில்தாபர் இந்தியா லாபம் 9% வளர்ச்சி

மூன்றாவது காலாண்டில்தாபர் இந்தியா லாபம் 9% வளர்ச்சி
தாபர் இந்தியா நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.400 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
தாபர் இந்தியா நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.400 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.367 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 7 சதவீதம் உயர்ந்து ரூ.2,353 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.2,199 கோடியாக இருந்தது. மொத்த லாபம் 10.7 சதவீதம் வளர்ச்சி கண்டு (ரூ.445 கோடியில் இருந்து) ரூ.493 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது தாபர் இந்தியா நிறுவனப் பங்கு ரூ.495-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.496.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.472.30-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.478.15-ல் நிலைகொண் டது. இது, கடந்த புதன்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.75 சதவீத சரிவாகும்.