சிறப்புக் கட்டுரைகள்

ஆல்கெம் லேபரட்டரீஸ் லாபம் 90 சதவீதம் வளர்ச்சி + "||" + Alchem Laboratories Profit 90 percent growth

ஆல்கெம் லேபரட்டரீஸ் லாபம் 90 சதவீதம் வளர்ச்சி

ஆல்கெம் லேபரட்டரீஸ் லாபம் 90 சதவீதம் வளர்ச்சி
ஆல்கெம் லேபரட்டரீஸ் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.390 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
ல்கெம் லேபரட்டரீஸ் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.390 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.205 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 90 சதவீதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் (ரூ.1,926 கோடியில் இருந்து) ரூ.2,182 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, நடப்பு நிதி ஆண்டிற்கு (2019-20), பங்குதாரர்களுக்காக ரூ.2 முகமதிப்பு கொண்ட ஒரு பங்குக்கு ரூ.22 இடைக்கால டிவிடெண்டு அறிவித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஆல்கெம் லேபரட்டரீஸ் பங்கு ரூ.2510-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.2698.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2510-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.2594.25-ல் நிலைகொண்டது. இது, சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 3.54 சதவீத ஏற்றமாகும்.

ஆசிரியரின் தேர்வுகள்...