கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நெல்லை–தென்காசி மாவட்டங்கள் 138 பூங்காக்கள் மூடப்பட்டன


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை:  நெல்லை–தென்காசி மாவட்டங்கள் 138 பூங்காக்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 21 March 2020 10:30 PM GMT (Updated: 21 March 2020 1:18 PM GMT)

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 138 பூங்காக்கள் மூடப்பட்டன.

நெல்லை, 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 138 பூங்காக்கள் மூடப்பட்டன.

கொரோனா வைரஸ் 

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பல்பொருள் அங்காடி ஆகியவை மூடப்பட்டு உள்ளன.

பொதுமக்கள் அதிகம் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள், குழந்தைகள் அதிக அளவு வந்து செல்லும் பூங்காக்களை அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டு உள்ளன.

138 பூங்காக்கள் 

நெல்லை மாநகராட்சி பகுதியில் 59 பூங்காக்கள் உள்ளன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 425 கிராம பஞ்சாயத்துக்களில் 21 அம்மா பூங்காக்கள் உள்ளன. அதேபோல் 36 நகர பஞ்சாயத்துக்களில் 39 பூங்காக்கள் உள்ளன.

சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை, தென்காசி, விக்கிரமசிங்கபுரம், அம்பை ஆகிய 7 நகரசபைகளில் 19 பூங்காக்கள் உள்ளன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 138 பூங்காக்கள் உள்ளன. இந்த அனைத்து பூங்காக்களும் நேற்று மூடப்பட்டன.

மேலும் பூங்காக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பூங்கா முன்பு அடைக்கப்பட்டதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story