வானவில் : ஹானர் எக்ஸ் 1 ஸ்மார்ட் டி.வி.


வானவில் : ஹானர் எக்ஸ் 1 ஸ்மார்ட் டி.வி.
x
தினத்தந்தி 27 May 2020 1:35 AM GMT (Updated: 27 May 2020 1:35 AM GMT)

வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஹானர் நிறுவனம் எக்ஸ் 1 சீரிஸில் 3 டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்துமே 4-கே அல்ட்ரா ஹை டெபனிஷன் ரெசல்யூஷனைக் கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளன.

50 அங்குலம், 55 அங்குலம், 65 அங்குலம் ஆகிய மூன்று அளவுகளில் இது வெளிவந்துள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 10 வாட் ஸ்பீக்கர்கள் இரண்டு உள்ளன. இவற்றில் 818 ஸ்மார்ட் சிப் உள்ளது. குவாட் கோர் மற்றும் 1.5 கிகாஹெர்ட்ஸ் பிராசஸர் உள்ளது. இவற்றில் 2 ஜி.பி. ரேம் மற்றும் 16 ஜி.பி. ரேம் நினைவகம் கொண்டவையாக வந்துள்ளன. தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல், கொரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story