தினம் ஒரு தகவல் : நடைபயிற்சியின் முக்கியத்துவம்


தினம் ஒரு தகவல் : நடைபயிற்சியின் முக்கியத்துவம்
x
தினத்தந்தி 13 July 2020 6:52 AM GMT (Updated: 13 July 2020 6:52 AM GMT)

உடல் பருமனாய் இருப்பவர்களைவிட, போதுமான உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் 2 மடங்கு அதிகமாக மரணத்தை தழுவுகின்றனர். தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் அகால மரணத்தை தவிர்க்க முடியும் என்கிறது, ஆய்வுகள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் உப்பும் கெடுதல்தான். அமெரிக்காவில் உட்கொள்ளப்படும் உப்பில் 75 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் வழியாகவே வருகிறது என லினஸ்பாலிங் ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

டின்களில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட சூப், உருளைக்கிழங்கு சிப்ஸ் உள்ளிட்டவை மூலமாக அதிகபட்ச சோடியத்தை அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர். நம் நாட்டில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் இதில் விதிவிலக்கு அல்ல.

எலும்புகளின் எடையை அதிகரிப்பதற்கு சாளை மீன் சாப்பிடலாம். அதில் கால்சியம் அதிகம். பச்சைக்கீரைகள், பால் பொருட்கள் எலும்பு எடையை பராமரிக்க உதவும்.

கால்சியத்தை எலும்புகள் ஏற்பதற்கு போதுமான அளவு வைட்டமின்-டி அவசியம். உப்பை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மது பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும்.

Next Story