எரிமலை பிரதேசம்


எரிமலை பிரதேசம்
x
தினத்தந்தி 9 April 2021 2:31 PM GMT (Updated: 9 April 2021 2:31 PM GMT)

பசிபிக் கடலில், தென் அமெரிக்காவின் சிலி முதல் நியூசிலாந்து வரைக்கும் இடைப்பட்ட பிரதேசம்தான் ‘ரிங் ஆப் பயர்’ என அழைக்கப்படுகிறது.

சிலியில் இருந்து நியூசிலாந்து வரைக்கும் இருக்கும் நேரடியான பாதை அல்ல இது. தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி, வட அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், தெற்காசியத் தீவுகள் ஆகிய இடங்களின் எல்லைகளை எல்லாம் தொட்டுவிட்டு, நியூசிலாந்தில் வந்து முடிகிறது ‘பசிபிக் ரிங் ஆப் பயர்’. சுமார் 40 ஆயிரம் கி.மீ தூரப் பிரதேசம்.

இந்த பூமியில் இருக்கும் இயற்கையின் அதிசயங்களில் அல்லது புதிர்களில் இதுவும் ஒன்று. இந்தப் பிரதேசத்தில் இருக்கும் நாடுகளுக்கு நிலநடுக்கமோ, எரிமலை வெடிப்போ புதியவை அல்ல. உலகின் பெரும்பாலான எரிமலைகள் துயில்கொள்வதே இங்கேதான். பூமியில் இருக்கும் எரிமலைகளில் 75 சதவிகித எரிமலைகள் இந்த பசிபிக் ரிங் ஆப் பயரில்தான் அமைந்திருக்கின்றன. அதனால்தான் எரிமலை பிரதேசம் என்று அழைக்கிறார்கள்.

உலகில் ஏற்படும் பெரிய அளவிலான நிலநடுக்கங்களில் 90 சதவிகித நிலநடுக்கங்கள் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன. இப்படி புவியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, அதே சமயம் சவாலான ஒரு பரப்புதான் ‘பசிபிக் ரிங் ஆப் பயர்’.

Next Story