பேங்க் ஆப் பரோடா வங்கியில் பணி


பேங்க் ஆப் பரோடா வங்கியில் பணி
x
தினத்தந்தி 17 April 2021 11:02 AM GMT (Updated: 17 April 2021 11:02 AM GMT)

பேங்க் ஆப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் 517 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் சீனியர் மேலாளர், பிராந்திய தலைவர், குழு தலைவர், தலைவர் (முதலீடு மற்றும் ஆராய்ச்சி), தலைவர் (செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம்), டிஜிட்டல் விற்பனை மேலாளர், ஐ.டி. செயல்பாட்டு ஆய்வாளர் -மேலாளர் என பல்வேறு பிரிவுகளில் 517 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதவியின் தன்மைக்கேற்ப 23 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முதுகலைப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்திருப்பதுடன் பணி அனுபவம் கொண்டவர் களாகவும் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் 
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப நடைமுறை சார்ந்த மேலும் விரிவான விவரங்களை www.bankofbaroda.in  என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Next Story