ஆரோக்கியம் ‘பீட்ரூட்’ பற்றி தெரிந்து கொள்வோமா..?


ஆரோக்கியம் ‘பீட்ரூட்’ பற்றி தெரிந்து கொள்வோமா..?
x
தினத்தந்தி 30 April 2021 5:04 PM GMT (Updated: 30 April 2021 5:04 PM GMT)

பீ ட்ரூட் வேரின் மேற்புறப் பகுதியிலிருந்து கிடைக்கக்கூடிய கிழங்கு வகையை சேர்ந்தது. காய்கறிகளில் இது அதிக இனிப்பு சுவையினை உடையது.

 பீட்ரூட் முதன் முதலில் ரோமானியர்களால் முறையாக பயிர் செய்யப்பட்டது. தனித்துவமான சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பீட்ரூட்டை பிரபலமாக்கின. இதன் தேவை உலகளவில் அதிகரிக்கவே பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, போலந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் வர்த்தக நோக்கில் பீட்ரூட்டினை அதிகளவு பயிர் செய்கின்றன. பீட்ரூட் மட்டுமின்றி, அதன் இலைகளும் உண்ண தகுந்தவை.

பீட்ரூட் செடிகள், நடப்பட்ட 50-60 நாட்களில் கிழங்காக அறுவடை செய்யப்படுகிறது. பொதுவாக இது அடர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களிலும் காணப்படுகிறது. சிவப்பு நிற பீட்ரூட்டில் பீடான் மற்றும் பீட்டானானின் போன்ற வெண்கல நிறமிகள் உள்ளன. இவை பீட்ரூட்டுக்கு தனித்த சிவப்பு நிறத்தை உண்டாக்குகின்றன. மஞ்சள் நிற பீட்ரூட்டில் பீட்டா சாந்தைன் என்ற நிறமி காணப்படுகிறது. பீட்ரூட் ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய காய்கறியாக இருந்தாலும் ஜூன் முதல் அக்டோபர் வரை அதிக சுவையுடன் அதிகளவில் கிடைக்கிறது.

பீட்ரூட்டில் வைட்டமின்-சி, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டோதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), போலேட்டுகள் ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ, இ போன்றவையும் உள்ளன. தாது உப்புக்களான காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்றவையும் பீட்ரூட்டில் அதிகளவு காணப்படுகின்றன.

Next Story