ரியல் மி 8 ஸ்மார்ட்போன்


ரியல் மி 8 ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 5 May 2021 1:25 PM GMT (Updated: 5 May 2021 1:25 PM GMT)

ரியல் மி நிறுவனம் 5-வது தலைமுறையைச் சேர்ந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.5 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. மீடியா டெக் 700 பிராசஸர் 8 ஜி.பி. ரேம் கொண்டதாக இது வந்துள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன்கொண்ட பேட்டரி 18 வாட் விரைவாக சார்ஜ் ஆகும் சார்ஜருடன் வந்துள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. செல்பி பிரியர்களுக்காக முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

நீலம், கருப்பு வண்ணங்களில் வந்து உள்ளது. இதன் விலை சுமார் ரூ.14,999. இதில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.16,999.

Next Story