ஹேய்ர் நவீன ரெபரிஜிரேட்டர்கள்


ஹேய்ர் நவீன ரெபரிஜிரேட்டர்கள்
x
தினத்தந்தி 7 July 2021 5:03 PM GMT (Updated: 7 July 2021 5:03 PM GMT)

வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஹேய்ர் நிறுவனம் தற்போது நவீன ரெபரிஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது.

மூன்று இன்வெர்ட்டர், இரட்டை ஃபேன் தொழில்நுட்பம், மேல்பகுதியில் அதிக இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேஜிக் கன்வெர்டிபிள் தொழில்நுட்பம் இதில் உள்ளதால் 10 நிலைகளில் குளிர் திறனை மாற்றும் வசதி கொண்டது. இது 345 லிட்டர், 375 லிட்டர் அளவுகளில் கிடைக்கும். இவை 3 நட்சத்திரக் குறியீடு கொண்டவை.

இதில் உறை நிலையை மைனஸ் 24 டிகிரி சென்டிகிரேடு வரை குறைக்க முடியும். இதனால் உணவுப் பொருளின் தேவைக்கேற்ப குளிர் நிலையை மாற்றியமைக்க முடியும். உணவும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். மசாலா பொருட்கள், கேக், பழங்கள், காய்கறிகள், கடலுணவு பொருட்கள், குளிர்பானங்கள், பால் உள்ளிட்டவைகளுக்கு வெவ்வேறு நிலையான குளிர் நிலைகள் தேவை. அவற்றுக்கேற்ப இதில் குளிர் நிலையை மாற்றியமைக்க முடியும்.

இதில் மேம்பட்ட மூன்று இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் உள்ளது. இதனால் மின் அழுத்த வேறுபாடுகளை தாங்கி இது செயல்பட உதவுகிறது. இதில் உள்ள இரட்டை ஃபேன் தொழில்நுட்பம் போதுமான காற்று ரெபரிஜிரேட்டரில் சுற்றி சுழல வழி செய்கிறது. குளிர்காற்று சீராக பரவுவதால் உணவுப் பொருட்கள் அதன் சுவை மாறாமல் இருக்கும். கண்ணுக்கு அழகான பூக்கள் டிசைன் கொண்டதாக இவை வந்துள்ளன.

இதன் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருக்கு 10 ஆண்டு உத்திரவாதம் அளிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.55 ஆயிரத்தில் ஆரம்பமாகிறது.

Next Story