சிறப்புக் கட்டுரைகள்

லெனோவா யோகா டூயட் 7 ஐ டேப்லெட் + "||" + Lenovo Yoga Duet 7i Tablet

லெனோவா யோகா டூயட் 7 ஐ டேப்லெட்

லெனோவா யோகா டூயட் 7 ஐ டேப்லெட்
லெனோவா நிறுவனம் இரண்டு புதிய ரக டேப்லெட்களை அறி முகம் செய்துள்ளது.
கழற்றி மாட்டும் வகையிலான கீ போர்டைக் கொண்டவை யாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. யோகா டூயட் 7 ஐ மற்றும் ஐடியா பேட் டூயட் 3 என்ற பெயரில் இவை வந்துள்ளன.

இதில் இன்டெல் 11-ம் தலைமுறை பிராசஸர் மற்றும் ஒருங்கிணைந்த கிராபிக் கார்டு உள்ளது. மேலும் இத்துடன் வண்ண இ-பேனாவும் வந்துள்ளது. இவற்றில் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம், 13 அங்குல திரை உள்ளது. இதன் இ-பேனா பன்முக சார்ஜ் செய்யும் வசதி கொண்டது. இதில் உள்ள சென்சார் தேவையான நிறத்தை தேர்வு செய்யும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு உதவும் வகையில் இது வடி வமைக்கப்பட்டுள்ளது. யோகா டூயட் 7 ஐ மாடலின் விலை சுமார் ரூ.79,999. ஐடியா பேட் டூயட் 3 மாடல் விலை சுமார் ரூ.29,999.