சிறப்புக் கட்டுரைகள்

ஒப்போ ரெனோ 6 + "||" + Oppo Reno 6

ஒப்போ ரெனோ 6

ஒப்போ ரெனோ 6
ஒப்போ நிறுவனம் புதிதாக ரெனோ 6 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது 5-ஜி அலைக்கற்றையில் செயல்படும் வகையில் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்டது. 6.55 அங்குல தொடு திரை கொண்ட இதில் மீடியாடெக் டைமென் சி.டி. 900 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதில் 12 ஜி.பி. ரேம் உள்ளது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் ரெனோ 6 புரோ மாடல் கேமராவில் கூடுதலாக 66 மெகா பிக்ஸெல் கேமரா இடம் பெற்றுள்ளது.

இதில் 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆவதற்காக 65 வாட் சார்ஜரும் அளிக்கப்படுகிறது. இதனால் 30 நிமிடத்தில் இது முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இரண்டு சிம் போடும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டது. விரல் ரேகை உணர் சென்சார் இதன் திரையிலேயே உள்ளது. ரெனோ 6 மாடலின் விலை சுமார் ரூ.29,999. ரெனோ 6 புரோ மாடல் விலை சுமார் ரூ.39,990.