சாதனையாளர்களின் வெற்றி ரகசியம்


சாதனையாளர்களின் வெற்றி ரகசியம்
x
தினத்தந்தி 2 Aug 2021 2:04 PM GMT (Updated: 2 Aug 2021 2:04 PM GMT)

சாதனையாளர்களின் வெற்றி ரகசியம்.

தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான், பிற மனிதர்களைப் பற்றி சிந்திப்பார்கள். வெற்றியாளர்கள் எப்போதுமே லட்சியங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். உங்களுடைய சிந்தனைதான், நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கும் -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

மிகப்பெரிய வெற்றியை நீங்கள் அடையப்போகிறீர்கள் என்றால், 2 விஷயங்களை நீங்கள் சந்தித்துதான் ஆக வேண்டும். ஒன்று.. ஆரம்பத்தில் தோல்வியைக் காண வேண்டியதிருக்கும். மற்றொன்று.. உங்களுடைய முயற்சி அதிகமாக கேலிக்குள்ளாகும் -அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஷ்.

நீங்கள் எதை சிந்திக்கிறீர்களோ, அப்படியேதான் மாறுவீர்கள். எனவே உங்களை மாற்ற நினைத்தால், முதலில் உங்களுடைய சிந்தனையை மாற்றுங்கள். - குத்துச்சண்டை வீரர் முகமது அலி.

வெற்றி அடைவதால், உங்களுடைய பலம் நிரூபிக்கப்படுவதில்லை. அது நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து உருவாகின்றது. கடினமான காலங்களில் துவண்டு போகாத மனப்பான்மையே உண்மையான பலம் -அர்னால்டு ஸ்வார்ஸனேக்கர்.

என்னிடம் இரண்டு வழிகள் இருந்தது. ஒன்று.. எனது குறைகளை எண்ணி வாழ்நாள் முழுவதும் வருந்துவது. மற்றொன்று.. எனது லட்சியத்தை நோக்கிப் பயணிப்பது. நான் இரண்டாவது வழியைத் தேர்வு செய்தேன். வெற்றி என்னை தேர்வு செய்துகொண்டது. -நிக்கோலஸ் ஜேம்ஸ் வோய்சிக்

வெற்றிபெற தகுதி எதுவும் தேவையில்லை. உங்கள் மனதை கட்டுப் படுத்தி, உங்களை உற்சாகமூட்டும் வேலைகளைச் செய்து வந்தாலே வெற்றி உறுதியாகிவிடும் -கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர்பிச்சை.

உங்கள் முன்பாக இருக்கும் அனைத்து வேலைகளையும், ஒரே நேரத்தில் செய்ய நினைக்காதீர்கள். அது மலைப்பையும், அயர்ச்சியையும் உண்டாக்கிவிடும். அதற்கு பதிலாக ஒரு வேலையை மட்டும் தேர்வு செய்து அதை முழுமையாக முடியுங்கள். பின்னர் அடுத்ததை நோக்கி நகருங்கள். வேலை எளிதாகும் - அமெரிக்க தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ்.


Next Story