சோனி ஹோம் சினிமா சிஸ்டம்


சோனி ஹோம் சினிமா சிஸ்டம்
x
தினத்தந்தி 29 Sep 2021 2:55 PM GMT (Updated: 29 Sep 2021 2:55 PM GMT)

வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் சோனி நிறுவனம் வீட்டிலேயே சினிமா பார்த்து ரசிக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் சோனி நிறுவனம் வீட்டிலேயே சினிமா பார்த்து ரசிக்கும் அனுபவத்தை வழங்குகிறது. இதற்கென புதிதாக ஹெச்.டி.540 ஆர் 5.1 சேனல் ஹோம் சினிமா சிஸ்டம் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. அதிர வைக்கும் இசையை துல்லியமாக அளிக்க 3 சவுண்ட் பார், வயர்லெஸ் ஊபர்கள் உள்ளன.

இதில் டால்பி டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 600 வாட் திறன் கொண்ட இதை பிராவியா டி.வி. உள்ளிட்டவற்றோடு இணைக்க முடியும். யு.எஸ்.பி. இணைப்பு மூலம் தங்களது விருப்பமான பாடல்களை அதிர வைக்கும் ஸ்பீக் கர்களில் கேட்டு மகிழும் வசதியும் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.28,990.

Next Story