டெபி ஸ்பேஸ் ஸ்மார்ட் கடிகாரம்


டெபி ஸ்பேஸ் ஸ்மார்ட் கடிகாரம்
x
தினத்தந்தி 27 Jan 2022 6:31 AM GMT (Updated: 27 Jan 2022 6:31 AM GMT)

இந்தியாவைச் சேர்ந்த ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் டெபி நிறுவனம் தற்போது ஸ்மார்ட் கடிகாரத்தை டெபி ஸ்பேஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இது 1.69 அங்குல சதுர வடிவிலான திரையைக் கொண்டுள்ளது. ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி, மலையேற்றம், ஸ்கிப்பிங், யோகா, கூடைப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து, நீச்சல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் காட்டும். இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றையும் துல்லியமாக அளவிடும். நீர் புகா தன்மை கொண்டது.

கருப்பு, நீல நிறங்களில் வந்துள்ள இந்த கடிகாரத்தின் விலை சுமார் ரூ.1,699.

Next Story