சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : நான்கு கேமராக்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 9 அறிமுகம் + "||" + Vanavil : Samsung Galaxy A9 with four cameras

வானவில் : நான்கு கேமராக்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 9 அறிமுகம்

வானவில் : நான்கு கேமராக்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 9 அறிமுகம்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரிய நிறுவனமான சாம்சங் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் 4 கேமராக்களுடன் அறிமுகம் செய்துள்ளது.
கேலக்ஸி ஏ 9 என்ற பெயரில் இந்த மாடல் அறிமுகமாகியுள்ளது. உலகிலேயே நான்கு கேமராக்களைக் கொண்டுள்ள முதலாவது ஸ்மார்ட்போன் என்ற பெருமை இந்த மாடலுக்கு உண்டு. இதில் பிரதான கேமராவின் லென்ஸ் 24 மெகா பிக்ஸலாகும். அடுத்தது 10 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்டிகல் ஜூம் லென்ஸ் 8 மெகா பிக்ஸெல் கொண்டது. நான்காவது 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது.

கேமராவின் வேலையை ஸ்மார்ட்போனில் அடக்கும் மிகவும் சிரமமான தொழில்நுட்பத்தை இந்நிறுவனம் தனது ஸ்மார்ட்போனில் சாத்தியமாக்கியுள்ளது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நுட்மும் புகுத்தியுள்ளது. இது காட்சிகளை நினைவில் கொள்ளும். அதனால் எது புகைப்பட பகுதிக்கான பொருள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப கேமராவை அட்ஜெஸ்ட் செய்யும். இதனால் வினாடிப் பொழுதில் மிகவும் சிறப்பான புகைப்படம் உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவாகிவிடும். விரல் ரேகை பதிவு சென்சார் பின்பகுதியிலும், முக அடையாளத்தில் போன் செயல்படும் (பேஸ் அன்லாக்) வசதி முன்பகுதியிலும் உள்ளது கருப்பு, லெமனேட் புளூ, பபிள் கம் பிங்க் உள்ளிட்ட நிறங்களில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 24 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது மேலும் சிறப்பாகும். இதனால் செல்பி படங்கள் மிக மிக துல்லியமாக இருக்கும். அதுவும் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கும் படங்கள் கூட சிறப்பாக இருக்கும்.

இதில் 6.3 அங்குல திரை உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 ஆக்டா கோர் பிராசஸர், 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் இது செயல்படுவது சிறப்பம்சமாகும். இதில் 3,800 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதனால் நீண்ட நேரம் செயல்பட உதவுகிறது. இதில் ஆக்சிலரோ மீட்டர், கைரோ சென்சார், ஜியோ மேக்னடிக் சென்சார், ஹால் சென்சார், பிராக்ஸிமிடி சென்சார், ஆர்.ஜி.பி. லைட் சென்சார் போன்றவை உள்ளன. மிகவும் மெல்லிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 183 கிராம் மட்டுமே. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : சென்னையில் விற்பனையை தொடங்கியது ‘ஏதெர்’
பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது தங்கள் ஸ்கூட்டர் விற்பனையை சென்னையில் தொடங்கியுள்ளது.
2. வானவில் : பியாஜியோவின் ‘அப்ரிலியா ஸ்டோர்ம்’
பியாஜியோ குழுமத்தின் பிரபல பிராண்டுகளில் அப்ரிலியா ஒன்றாகும். இந்தப் பெயரில் ஸ்கூட்டர்கள் மோட்டார் சைக்கிள்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது.
3. வானவில் : டி.வி.எஸ். அபாச்சே ஆர்.ஆர் 310 அறிமுகம்
டி.வி.எஸ். நிறுவனம் தனது பிரபல மாடலான அபாச்சேயில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
4. வானவில் : ஹோண்டா ஆக்டிவா 5 ஜி ஸ்பெஷல் எடிஷன்
ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆக்டிவா. இந்த மாடலில் இரண்டு புதிய வண்ணங்களைக் கொண்ட ஸ்பெஷல் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
5. வானவில் : வாகனமும் தமிழ் திரைப்படமும்... மங்காத்தா படத்தில் அஜித் ஓட்டிய பைக்
கார் மற்றும் பைக் பந்தயங்களில் தல அஜித்குமாருக்கு அலாதி பிரியம் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்த ஒன்று.