சிறப்புக் கட்டுரைகள்

வானவில் :ஸென்ஹைசர் ஆம்பியோ சவுண்ட் பார் + "||" + Vanavil : Sennheiser Ambio Sound Bar

வானவில் :ஸென்ஹைசர் ஆம்பியோ சவுண்ட் பார்

வானவில் :ஸென்ஹைசர் ஆம்பியோ சவுண்ட் பார்
ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த ஸென்ஹைசர் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆம்பியோ சவுண்ட் பாரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,99,990 ஆகும்.
இசையின் வெளிப்பாடை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தும். இதில் முப்பரிமாண (3 டி) ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் வர்ச்சுவலைசேஷன் தொழில்நுட்பம் உள்ளதால் இசை கருவிகளிலிருந்து வெளியாகும் துல்லியமான இசை சற்றும் மாறுபாடின்றி இதில் வெளியாகும். திரைப்படம் பார்ப்பதாக இருந்தாலும் சரி, இசை நிகழ்ச்சிகளை கேட்டு ரசிப்பதாக இருந்தாலும் சரி, பரபரப்பான கால்பந்தாட்ட போட்டியை ரசிப்பதானாலும் இது மிகுந்த உன்னதமான இசையை வழங்கும்.

அறையின் தன்மைக்கேற்ப இதிலிருந்து இசை வெளியாகும். கூகுள் குரோம்காஸ்ட், புளூடூத் இணைப்பு மூலம் இதை செயல்படுத்தலாம். ஹெச்.டி.எம்.ஐ. இ.ஏ.ஆர்.சி, சி.இ.சி. இணைப்பு வசதிகள் உள்ளன. இது தவிர 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், ஆப்டிகல் ஆடியோ போர்ட், ஏ.யு.எக்ஸ். இன்புட் ஆகியன உள்ளது. இந்த சவுண்ட்பாரை ஸ்மார்ட் கண்ட்ரோல் செயலி மூலமும் செயல்படுத்த முடியும். இது ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படக் கூடியது.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : ஜெப்ரானிக்ஸ் சவுண்ட் பார்
ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் இந்திய நிறுவனமான ஜெப்ரானிக்ஸ், புதிய வகையிலான ஆடியோ சாதனங்களை அதாவது சவுண்ட் பார்களை அறிமுகம் செய்துள்ளது.