உலகின் ஆபத்தான 5 விளையாட்டுகள்...!


உலகின் ஆபத்தான 5 விளையாட்டுகள்...!
x

தேக ஆரோக்கியம் பேணுவது, அனுதினமும் கடினப் பயிற்சி, கடும் போட்டிகளைச் சமாளிக்கும் பக்குவம், விடாமுயற்சி, இலக்கை நோக்கிய பயணங்கள், உழைப்பு என பல அம்சங்களைக் கொண்டது.

ஆபத்தான விளையாட்டுகள் சிலவற்றை தெரிந்து கொள்வோமா?



1. ஹெலி பனிச்சறுக்கு

பனி மலையின் உச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து, குச்சி போன்ற உபகரணங்களை பயன்படுத்தி சறுக்கிக் கொண்டே அடித்தளத்துக்கு வருவதுதான் ஹெலி பனிச்சறுக்கு. உலக அளவில் கனடாவிலும், அதற்கு அடுத்து காஷ்மீரிலும்தான் பனிக்காலத்தில் இது விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டில் கொஞ்சம் தடுமாறினாலும், பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழும் அபாயம் உள்ளது.

2. பேஸ் ஜம்பிங்

ஏதாவது உயரமான கட்டிடங்களை கண்டால் போதும், இந்த விளையாட்டு வீரர்கள் பரவசம் அடைந்து விடுவார்கள். உயரமான கட்டிடங்கள், ஆன்டெனாக்கள், பாலங்கள், தரை விளிம்புகள் என நான்கு வகை உயரமான இடங்களிலிருந்து ஹெல்மெட் மற்றும் காற்றுப்பை பாதுகாப்போடு குதிக்கிறார்கள். இது ஸ்கை டைவிங்கை விட ஆபத்து நிறைந்த சாகச விளையாட்டு என்று நார்வே நாட்டு ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. வயதும், பயிற்சியும் இந்த விளையாட்டிற்கு மிக முக்கியம்.

3. காளை ஏற்றம்

இது ஐரோப்பாவில் சில நாடுகளில் விளையாடப்படுகிறது. பெரிய எருது ஒன்றில் விளையாட்டு வீரர் ஏறி அந்த காளையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அமர்ந்திருக்க வேண்டும். காளையின் மீது இருந்து விழுந்தால் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில், சில நாடுகளில் இந்த விளையாட்டை இளைஞர்கள் வீரதீர விளையாட்டாக கருதி விளையாடி வருகின்றனர்.

4. அலைச் சறுக்கு

அலைச் சறுக்கு விளையாட்டு மீது அதீத ஆர்வம் இன்றைய இளைஞர்களுக்கு உண்டு என்றாலும், அதன் ஆபத்தை பெரும்பாலானவர்கள் அறியாமல் இருக்கின்றனர். துடுப்பு மற்றும் சிறு படகுகளைக் கொண்டு அதிதீவிர அலைகளின் மீது சறுக்கி விளையாடும் இந்த விளையாட்டில் பல நேரங்களில், நீரில் மூழ்கி உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.

5. மலை ஏற்றம்

பார்ப்பவர்களையும் அச்சமுறச் செய்யும் விளையாட்டு மலையேற்றம். ஒழுங்கற்ற, செங்குத்தான பாறைகளில் கிளிப்களை போட்டு ஏறுவது அசாத்திய திறமை என்றாலும், பல மலைகளில் நீர்க்கசிவின் காரணமாக பிடியில்லாத நிலை, திடீரென ஏற்படும் மண் அல்லது பனிச்சரிவு, ஒழுங்கற்ற காலநிலை போன்ற அசாதாரண சூழல் மலையேற்ற வீரர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழும்.


Next Story