82 வயது இசைக் கலைஞர்!


82 வயது இசைக் கலைஞர்!
x

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சீன உணவகத்தை நடத்தி வருகிறார் 82 வயது சுமிகோ இவாமுரோ. பகலில் உணவக உரிமையாளராக இருப்பவர், இருள் சூழ தொடங்கியதும் இசைக்கலைஞராக அவதாரம் எடுக்கிறார்.

டோக்கியோவில் உள்ள இரவு விடுதிகளில் அற்புதமான இசையை வழங்கி வருகிறார். தன்னிடம் இவ்வளவு அருமையான இசைத் திறமை இருப்பதை 12 ஆண்டுகளுக்கு முன்பு, மகனின் பிறந்தநாள் விழாவில் தான் கண்டு கொண்டேன் என்று பெருமிதம் கொள்கிறார்.

மகனின் பிறந்தநாள் விழாவில் கிடைத்த பாராட்டை தொடர்ந்து முறையாக பயிற்சியில் சேர்ந்து இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, 'டி.ஜே'வாக மாறினார். குறுகிய காலத்திலேயே டோக்கியோவின் புகழ்பெற்ற டி.ஜேவாகவும் உருவாகிவிட்டார்.

"என்னுடைய ரசிகர்கள் எல்லாம் என்னை விட 60 ஆண்டுகள் இளையவர்கள். ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே மிகப் பெரிய தலைமுறை இடைவெளி இருக்கிறது. அப்படி இருந்தும் என்னை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

உணவகத்தில் உணவைக் கொடுக்கும் போதும், இசையை வழங்கும்போதும் உடனடியாக வாடிக்கையாளர்களின் உணர்வுகள் முகத்தில் தெரிந்துவிடும். என் தந்தை ஜாஸ் ட்ரம்மர் இசை பிரியர். அவரிடமிருந்துதான் எனக்கு இசை ஞானம் வந்திருக்கிறது.

19 வயதில் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இசையை விட்டுவிட்டு, உணவகத்தை ஆரம்பித்தேன். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்திலாவது இசையை வெளிப்படுத்த முடிந்ததில் திருப்தியாக உணர்கிறேன்" என்கிறார் சுமிகோ.

ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே மிகப் பெரிய தலைமுறை இடைவெளி இருக்கிறது. அப்படி இருந்தும் என்னை ஏற்றுக்கொண்டார்கள்


Next Story